Monday, March 18, 2013

ஈழத்தின் கோரம்

இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்
உமக்கு எம் அன்னையே........
தாய் மடியில் தவழ வேண்டிய எம்
பிஞ்சுகள் ம்ண்ணின் மடியில் புதையலாய்.....
இந்த பிஞ்சுகளின் நிலை கண்டு கூட உன்
மனம் மாறவில்லையோ?
கற்பிழந்த சீதைகள் மரண‌த்தீயில்
குளித்து விட்டனர்.......
ராவணனை கண்டு விட்டோம்- எங்கே
வில்லேந்திய ராமன்.
பாவை ஒருவளுக்காய் அசோகவனம்
எரித்த அனுமனே- இன்று
ஒராயிரம் அனுமன்கள் தேவை எரிக்க‌
அத்தனை அசோகவனங்கள் உள்ளன.
துட்டகாமினுவை அடக்க அன்று
ராஜ ராஜ சோழன் புறப்பட்டான்.
ராஜபக்சேவை ஒடுக்க எந்த
சோழன் வரப்போகிறான்......
ராமனை காத்தது பதிவிரதையின் அததாலி- வர‌
போகிற ராமனை காக்குமா இழந்த
பெண்களின் ம்ரணம் எனும் இத்தாலி?

Monday, March 11, 2013

                            மனச்சிறை

 

            பல்லவன் ம‌ட்டும்
            உனை கண்டிருந்தால்
            கொண்டு சென்றிருப்பான‌டி
             மாமல்லதிற்கு‍‍ ஆனால்
             நானோ முந்தி வைத்துவிட்டேன்
             உனை என் மனச்சிறையில்
             சிற்பமாக அல்ல‌....!
             இன்னும் ஆழமாக......!

Thursday, May 15, 2008

புத்தகம்


* காலக்கடலில்


வாழ்க்கை கப்பலுக்கு


கலங்கரை விளக்கம்.


* தகரத்தை தங்கமாக்


தங்கத்தை வைரமாக‌


பட்டை தீட்டூம் வைரம்.


* அறியாமை ஜீவன்களால்


கண்டெடுக்க முடியாத‌

புதையல்.
* சிகரம் தொட்டவர்களின்


வெற்றிக்கு பின்னால்


ஒளிரும் தாரக மந்திரம்.
* மொழி முதலாக


மனிதன் ஈறாக‌


அனைத்தையும்


பாதுகாக்கும்


அறிவுப்பெட்டகம்.
* கல்விப்பாதை தெரியா


பேதைக்கும்


விழிதந்து‍ ஒளிகாட்டும்


வழிகாட்டி.

Labels: